பாண்டிய நாட்டு பஞ்ச ஸ்தலங்களில் முக்கிய பிரதான ஸ்தலமாக சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாரா யண சுவாமி கோவில் விளங்கி வருகிறது. சோழ நாட்டில் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. இதே போன்று பாண்டிய நாட்டிலும் புகழ் பெற்ற பஞ்ச ஸ்தலங்கள் அமைந்திருக்கிறது. திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோ விலைச் சுற்றிலும் பஞ்ச ஸ்தலங்கள் அமைந் துள்ளது.
இதில் நிலம் (மண்) ஸ்தலமாக சங்கரன்கோவில் சங்கர லிங்க சுவாமி கோவிலும், நீர் (தண்ணீர்) ஸ்தலமாக தாருகாபுரம் மத்தியஸ்த நாத சுவாமி கோவிலும், நெருப்பு ஸ்தலமாக கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவிலும், காற்று (வாயு) ஸ்தலமாக தென்மலை திரிபுரநாத சுவாமி கோவி லும், ஆகாய ஸ்தலமாக தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவலிங்கேஸ்வரர் சுவாமி கோவிலும் அமைந்துள்ளது.இந்த பஞ்ச ஸ்தல ஆலயங்களில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் மஹா சிவராத்திரி அன்று பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் இரவு முழுவதும் இந்த 5 ஆலயங்களுக்கும் சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
இறைவனின் ஐந்து முகங்கள்
1. ஈசானம் - பளிங்கி நிறம் -நடுவில் இருக்கும் முகம்.
2.தத்புருஷம் - பொன்னிறம் -கிழக்கில் இருக்கும் முகம்
3. அகோரம் - கருமை நிறம் -தெற்கில் இருக்கும் முகம்.
4. வாமதேவம் - சிவப்பு நிறம் -வடக்கில் இருக்கும் முகம்.
5. சத்தியோ ஜாதகம் - வெண்மை நிறம் - மேற்கில் இருக்கும் முகம்.
ஸ்ரீசங்கரநாராயணசுவாமி கோயிலின் முக்கிய திருவிழாக்கள்
சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த திருவிழாக்களின் விபரங்களை பக்தர்களாகிய நாம் அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா.
1. சித்திரைப் பெருந்திருவிழா - 48 நாட்கள்.
2. ஆடித்தபசு திருவிழா - 12 நாட்கள்.
3. நவராத்திரி லட்சார்ச்சனை - 9 நாட்கள்.
4. ஐப்பசி திருக்கல்யாணம் - 10 நாட்கள்.
5. கந்தசஷ்டி திருவிழா - 6 நாட்கள்.
6. திருவெம்பாவை திருவிழா - 10 நாட்கள்.
7. தை மாதம் கடைசி வெள்ளி அன்று
ஆவுடைப்பொய்கை தெப்பத் தேரோட்டம் - -
8. நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு - மாதம் 2முறை.
பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆடிச்சுற்று
தொழிலதிபர் சி.ராமச்சந்திரன், லெட்சுமி பேன்ஸி ஸ்டோர் சங்கரன்கோவில் அருள் மிகு சங்க ரநாராயண சுவாமி திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிமாதம் 12 நாட்கள் ஆடித்தபசு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நாள் முதல் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை நிறை வேற்ற அன்னை கோமதி அம்பாளை வேண்டி ஆடிச்சுற்றாக கோவிலின் உட்பிரகாரத்தை 108 முறை சுற்றி வரும் நிகழ்ச்சி இங்கு கோலாகலமாக நடந்து வருகிறது.
பக்தர்கள் ஆடிச்சுற்றில் கோவிலின் பிரகாரங்களை பக்தர்கள் சுற்றி வரும்போது இது கடலா இல்லை கடல் அலையா என்பது போன்று பக்தர்கள் கூட் டம் கோவிலில் சங்கமித்து இருக்கும். இந்த ஆடிச்சுற்றில் ஆண்கள் முதல் பெண்கள் வரையிலும், சிறுவர்கள் முதல் சிறுமியர்கள் வரை யிலும் கூட்டம் கூட்டமாக ஆடிச்சுற்று சுற்றி வரு வதை நாம் பார்க்க முடியும்.
இக்கோவிலில் சங்கரலிங்க சுவாமி சன்னதி, சங்கரநாராயண சுவாமி சன்னதி, கோமதி அம்பாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகளையும் சேர்த்து ஒரு பிரகாரமாக இருக்கும் கோவிலின் வெளிப்பிரகாரங்களை பக்தர்கள் 108 முறை சுற்றி வழிபடுவதையே ஆடிச்சுற்று என்கிறோம்.
ஐந்து வகை தாண்டவம்
1. ஆனந்த தாண்டவம் - தில்லை சித்திரைக்கூடம்.
2. அசாப தாண்டவம் - திருவாரூர்.
3. ஞானசுந்தரத் தாண்டவம்- திருவாலவாய்.
4. ஊர்த்துவத் தாண்டவம் - திருப்புக் கொளியூர்.
5. பிரமத் தாண்டவம் - திருமுருகன்பூண்டி.