Sunday, 1 September 2013

வீரகேரளம்புதூரில் சட்ட விழிப்புணர்வு முகாம்

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2013,04:20 IST

வீரகேரளம்புதூர்:செங்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் வீரகேரளம்புதூரில் நடந்தது.

நீதியின் முன் அனைவரும் சமம் என்னும் கருத்தை வலியுறுத்தும் வகையில், ஏழை, எளிய மக்களுக்கும் சட்ட உதவிகள் கிடைக்கும் விதமாக, சட்டப் பணிகள் குழுவினர் இலவச சட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். இது குறித்த சட்ட விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வண்ணம், மாதம் தோறும் ஒரு பகுதியில் இக்குழுவின் சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்படுகிறது.

வீரகேரளம்புதூரில் நடந்த முகாமிற்கு செங்கோட்டை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் தலைமை வகித்தார். வக்கீல்கள் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணிய ராஜா, சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் முன்னிலை வகித்தனர். வக்கீல் சின்னராஜ் பாண்டியன் வரவேற்றார். சட்டம் சேர்ந்த மற்றும் சேராத, அரசியலமைப்புச் சேர்ந்த மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும், அவற்றை தீர்க்க, இலவச சட்ட உதவிகளைப் பெற, சட்டப் பணிகள் குழுவினரைத் தொடர்பு கொள்ளும் முறை குறித்தும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை நீதிபதி மாதவ ராமானுஜம் பெற்றுக் கொண்டார்.

முகாமில் வக்கீல்கள் சுப்பையா, சுடர் முத்தையா, ஆதி பாலசுப்பிரமணியன், ஹரி பாலகிருஷ்ணன், ராஜன், ராமலிங்கம், இளங்கோ, பழனிக்குமார், வேலு, சதீசன் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். வக்கீல் சுடலைமுத்து நன்றி கூறினார்.

No comments:

Post a Comment