அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்
மூலவர் | : | அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் | |
உற்சவர் | : | ||
அம்மன்/தாயார் | : | ||
தல விருட்சம் | : | வேப்பமரம் | |
தீர்த்தம் | : | சிற்றாறு | |
ஆகமம்/பூஜை | : | ||
பழமை | : | 500 வருடங்களுக்கு முன் | |
புராண பெயர் | : | வீரகேரளம்புதூர் | |
ஊர் | : | வீரகேரளம்புதூர் | |
மாவட்டம் | : | திருநெல்வேலி | |
மாநிலம் | : | தமிழ்நாடு | |
தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும் , நிலவளமும் நிறைந்த குற்றாலச் சாரலின் குளுமையுடன் சிற்றாற்றின் வடபுரம் அமைதியும் இயற்கை அழகும் கொண்ட பேரூராக “வீரகேரளம்புதூர்” அமைந்துள்ளது.
உச்சிமாகாளி பெயர் காரணம்
மத்திய பிரதேசம் உஜ்ஜயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தவர் விக்ரமாதித்த மகாராஜா. காட்டில் ஆறு மாதமும், நாட்டில் ஆறு மாதமும் ஆட்சி செய்வது வழக்கம். இவரது குலதெய்வம் உஜ்ஜயினி மாகாளி. இவளைத்தான் தமிழகத்தில் "உச்சினி மாகாளி, உச்சிமாகாளி என்று பெயரிட்டு அழைக்கின்றனர். |
பாடல்
வீரை மாநகர் வாழும் உச்சினிமாகாளியே
உந்தன் பாதம் பணிந்திடவே வந்தோம் வந்தோம்
சிற்றாற்றங்க்கரை வாழும் பாராசக்தியே
உந்தன் பாதம் பணிந்திடவே வந்தோம் வந்தோம்
பெங்களூரு மக்களெல்லாம் வந்தோம் வந்தோம்
பெருவுடையாளை காணவே வந்தோம் வந்தோம்
சென்னை மக்களெல்லாம் வந்தோம் வந்தோம்
செண்பகவள்ளியை காணவே வந்தோம் வந்தோம்
கோவை மக்களெல்லாம் வந்தோம் வந்தோம்
கோமதியை காணவே வந்தோம் வந்தோம்
திருச்சி மக்களெல்லாம் வந்தோம் வந்தோம்
திரிபுரசுந்தரியை காணவே வந்தோம் வந்தோம்
மதுரை மக்களெல்லாம் வந்தோம் வந்தோம்
மரகதவல்லியை காணவே வந்தோம் வந்தோம்
நெல்லையிலிருந்து வந்தோம் வந்தோம்
நெல்லினியாளை கணவே வந்தோம் வந்தோம்
அரபுக்கடல் தாண்டி வந்தோம் வந்தோம்
அபிராமியைக் காணவே வந்தோம் வந்தோம்
மலையாள தேசத்திலிருந்து வந்தோம் வந்தோம்
மணங்கமழ்குழலியைக் காணவே வந்தோம் வந்தோம்
அண்டை மக்களெல்லாம் வந்தோம் வந்தோம்
அரியநாயகியை காணவே வந்தோம் வந்தோம்
சிற்றாற்றங்கரை கடந்து வந்தோம் வந்தோம்
வீரை மாநகர் நோக்கி வந்தோம் வந்தோம்
செண்டைமேளம் காணவே வந்தோம் வந்தோம்
செழிப்புடன் வாழவே வந்தோம் வந்தோம்
முளைப்பாரி காணவே வந்தோம் வந்தோம்
முக்தி பெறவே வந்தோம் வந்தோம்
கொடைவிழா காணவே வந்தோம் வந்தோம்
குடும்பத்தோடு எல்லோரும் வந்தோம் வந்தோம்
குலமகள் கோயிலுக்கு வந்தோம் வந்தோம்
கும்பிட்டு வழிபடவே வந்தோம் வந்தோம்
கும்பிட்டு வழிபடும் பக்தருக்கு - குறைவில்லா
வாழ்வு தரும் உச்சினிமாகாளி
கோரிக்கையை நிறைவேற்று பராசக்தியே
கோவிந்தனின் சோதரியே உச்சினிமாகாளி
சுபம்! சுபம்!! சுபம்!!!
திருக்கோவில் அமைப்பு
இத்திருக்கோயிலின் கர்ப்பகிரஹத்தில் “ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கரத்தில் சூலம் ஏந்தியவாறு புன்முறுவலுடன் அமர்ந்த திருக்கோலத்தில் வடக்கு நோக்கி அருள்பாலித்து வருகிறாள் .கற்பூர ஆரத்தியின்போது அவளது திருமுகத்தில் தவழும் புன்னகை அனைவரின் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளும்..இதர தெய்வங்கள்
கணபதி
பைரவர்
பழைய உச்சினிமாகாளி
சுடலை மாடசுவாமி –பரிவாரதேவதைகள்
இத்தனை பரிவாரதேவதைகளுடன் உச்சினிமாகாளி அருள்பாலித்து வருகிறாள்.
திருவிழா
தசரவில் பத்து நாட்களுக்கு கொலு வைபவும் . தமிழ் மாதம் கடைசி செவ்வாய், வெள்ளிகிழமையும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.அம்மனுக்கு ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதம் 3வது செவ்வாய்க்கிழமை கொடை நடத்தும் விழா நடைபெறும். ஊர் மக்கள் இணைந்து சீரும், சிறப்புமாக அம்மனின் விழாவை நடந்தி தேவியின் அருளைப் பெறுகிறார்கள்
வீரகேரளம்புதூர் அருள்மிகு உச்சிமாகாளி அம்மன் திருக்கோவில் கொடை விழா
------------------------------
ஆவணி மாதம் 2வது செவ்வாய் கிழமை காலை 7 மணிக்கு மேல் 9.00 க்குள் கால் நாட்டு விழா
------------------------------
2வது நாள் புதன் கிழமை இரவு 7 மணிக்கு கும்மிப்பாட்டு நடைபெறும்.
------------------------------
4வது நாள் வெள்ளி கிழமை மாலை 5 மணிக்கு 10 வது ஆண்டாக 508 திருவிளக்கு பூஜை
இரவு 7 மணிக்கு கும்மிப்பாட்டு & கோலாட்டம் நடைபெறும்.
------------------------------
5வது நாள் சனிக்கிழமை
இரவு 7 மணிக்கு கும்மிப்பாட்டு நடைபெறும்.
இரவு 9 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம்
------------------------------
6வது நாள் ஞாயிற்றுக்கிழமை
இரவு 7 மணிக்கு கும்மிப்பாட்டு நடைபெறும்.
இரவு 9 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி
------------------------------
7வது நாள் தேதி திங்கள்கிழமை
காலை 6-7மணிக்குள் வருடாபிஷேகம்
காலை 11மணிக்கு அன்னதானம்
மாலை 6 மணிக்கு அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வருதல் மற்றும் வீரை ப்ரண்ட்ஸ் குரூப்ஸ் வழங்கும் கேரளா புகழ் கொட்டாரக்கரை கலா மந்தீர் வழங்கும் செண்டா மேளம்
இரவு 9.30 மணிக்கு மெல்லிசை நிகழ்ச்சி
------------------------------
8வது நாள் செவ்வாய்கிழமை
காலை 9 மணிக்கு பால் குடம் மற்றும் கன்னியாகுமரி தீர்த்தம் எடுத்து ஊர் பவனி வருதல்
மதியம் 12 மணிக்கு பால் குடம், தீர்த்த குடம் அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனை
மாலை 4 மணிக்கு பொங்கலிடுதல்
இரவு 9 மணிக்கு தீச்சட்டி எடுத்து ஊர் பவனி வருதல்
இரவு 12 மணிக்கு அம்மனை சிங்க வாகனத்தில் அலங்காரம் செய்து தீபாராதனை.
கோயில் நித்ய பூஜை செய்யும் பூசாரி படையல் பூஜையை பிரமாதமாக செய்வார். அது சமயம் அம்பாள் பக்தர்கள் மேல் இறங்கி கேட்டவர்க்கு கேட்ட வரங்களை அருளுவாள். அந்தக் காட்சியைக் கண்டு பக்தர்கள் பரவசமடைவார்கள்.
நிகழ்ச்சி ஏற்பாடு வீரை ப்ரண்ட்ஸ் குரூப்ஸ் வழங்கும் கேரளா புகழ் கொட்டாரக்கரை கலா மந்தீர் வழங்கும் செண்டா மேளம்,மகுட ஆட்டம்.
------------------------------
9வது நாள் புதன்கிழமை
காலை 9மணிக்கு மஞ்சள் நீராட்டு முளைப்பாரி கரைத்தல் நிகழ்ச்சி.
தாலாட்டு கொட்டு மேளம் முழங்க அது சமயம் அம்பாள் பக்தர்கள் மேல் இறங்கி வரும் அழகு தனிச் சிறப்பு. கையில் சூலமும், விபூதி கொப்பரையும் கொண்டு வந்து ஒவ்வொரு வீடாக மஞ்சள் நீரில் நிறை குடஅபிஷேகம் பெற்று கோயிலைச் சென்றடைவாள்.
------------------------------
திறக்கும் நேரம்:
காலை 9- 11 மணி வரை, மாலை 5-8 மணி வரையிலும் உச்சினிமாகாளி அம்மனை தரிசனம் செய்யலாம்.முகவரி:
அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன் திருக்கோவில், வீரகேரளம்புதூர்,- 627 861 திருநெல்வேலி மாவட்டம்.