திருநெல்வேலி மாவட்டத்தில், மின் ஆளுமை திட்டத்தின் கீழ், 3ஆம் கட்டமாக திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகங்களில் இணையதளம் வழியே சான்றிதழ்கள் பெறும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:திருநெல்வேலி மாவட்ட மின் ஆளுமை திட்டத்தின் கீழ், வட்டாட்சியர் அலுவலகங்கள் மூலம் மக்கள் பல்வேறு சான்றிதழ்களை இணையதளம் வழியே பெறும் புதிய வசதியை முதல்கட்டமாக ராதாபுரம் வட்ட அலுவலகமும் இரண்டாம் கட்டமாக நான்குனேரி, அம்பாசமுத்திரம் வட்ட அலுவலகங்களும் அளித்துவருகின்றன. மூன்றாம் கட்டமாக வெள்ளிக்கிழமை முதல் (பிப். 20) திருநெல்வேலி, வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகங்களிலும், சனிக்கிழமை முதல் (பிப். 21) செங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும் இந்த வசதி செயல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி, இந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் மக்கள் ஜாதி, வருமானம், நிரந்தர இருப்பிட, முதல் பட்டதாரி சான்றிதழ்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் ஆகியவற்றுக்கு தங்களது கிராமத்துக்கு அருகேயுள்ள பொது சேவை மையம் மூலம் இணையதளம் வழியே விண்ணப்பிக்க வேண்டும்.
வட்ட அலுவலகங்களில் நேரிடையாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. இம்முறையில் இணையதளம் வழியே அனுப்பப்படும் விண்ணப்பங்கள் உரிய கிராம நிர்வாக அலுவலருக்கு இணையதளம் வழியே சென்றுவிடும். அவரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்கள் உரிய வருவாய் ஆய்வாளருக்கும் பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும் இணையதளம் வழியாகவே சென்றுவிடும். ஏற்கப்பட்ட விண்ணப்பத்துக்கான சான்றிதழ்களை பொதுமக்கள் விண்ணப்பித்த பொதுசேவை மையம் மூலம் எளிதில் பெறலாம்.
மேலும், திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்டத்துக்குள்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களான மானூர், பாளையங்கோட்டை, ஆலங்குளம், தென்காசி, கீழப்பாவூர், செங்கோட்டை, கடையநல்லூர் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு சமூக நலத்துறையின் சார்பிலான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், ஈ.வெ.ரா மணியம்மையார் நினைவு ஏழையர் விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் மற்றும் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகளுக்கான விண்ணப்பங்களையும் பொதுசேவை மையங்களில் இணையதளம் வழியே பதிவுசெய்தால் போதும். இதன் மூலம் மக்கள் அரசு அலுவலகங்களுக்கு வீணாக அலைவதையும், காலவிரயத்தையும் தவிர்க்கலாம்.
எனவே, திருநெல்வேலி, வீரகேரளம்புதூர், செங்கோட்டை வட்ட அலுவலகங்களுக்கு உள்பட்ட கிராம பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் அவ

No comments:
Post a Comment