Friday, 20 February 2015

நெல்லை மாவட்டத்தில் நவீன நில அளவை நிலையம் பிரபாகரன் எம்பி தகவல்

நெல்லை மாவட்டத்தில் 11 தாலுகாக்களில் நவீன நில அளவை மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாக பிரபாகரன் எம்பி தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் கலெக்டர் கருணாகரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் பிரபாகரன் எம்பி பேசியதாவது: நெல்லை மாவட�டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 19 ஊராட்சி ஒன்றியங்களில் 425 கிராம பஞ்சாயத்துகளில் 3 லட்சத்து 52 ஆயி ரத்து 730 குடும்பங்களில் 5 லட்சத்து 62 ஆயிரத்து 431 பேர் பதிவு செய்யப்பட்டு வேலை அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.167 வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு நிதியாண்டில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 63 பேர் பதிவு செய்து 76.98 லட்சம் மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ.221 கோடி மதிப்பீட்டில் 36 ஆயிரத்து 289 பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 ஆயிரத்து 214 பணிகள் முடிந்துள்ளன.
தேசிய ந�ல ஆவணங்கள் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் 11 தாலுகா அலுவலகங்களில் நவீன நில அளவை மேலாண்மை நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் பாளை, சங்கரன்கோவில், ராதாபுரம், வீ.கே.புதூர், ஆலங்குளம் ஆகிய 5 தாலுகாக்களில் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. நெல்லை, அம்பை, நாங்குநேரி, சிவகிரி, செங்கோட்டை, தென்காசி ஆகிய 6 தாலுகா அலுவலகங்களில் பணிகள் நடந்து வருகிறது. இவ�வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மேயர் புவனேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் விஜயகுமார், மகளிர் திட்ட அலுவலர் ஜெயக்குமார், கண்காண�ப்புக் குழு உறுப்பினர்கள் ஜோதி பரமச�வன், வெண்ணிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அசன் இப்ராஹிம், செய்தி, மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணா, பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத் துரை, கவுன்சிலர் பரணி சங்கரலிங்கம், மானூர் யூனி யன் சேர்மன் கல்லூர் வேலாயுதம் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பிரபாகரன் எம்பி தகவல்

No comments:

Post a Comment