Sunday, 25 January 2015

வீரகேரளம்புதூர் திருமால் பதிகம்


ஒம் நாராயணாய நம

வீரகேரளம்புதூர் திருமால் பதிகம்
காப்பு
நேரிசை வெண்பா

காரைப் பழித்த கருநிறத்தெங் கண்ணனைத்தென்
வீரைப் பதியில் விழம்புதற்குத்-தாரைமதத்து
ஆனைமுக நாற்தோள் ஐந்துகரங் கொண்டவிருஞ்
சேனையர்கோன் காப்புச் சேயும்.

நூல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

உன்னதுசந் நிதியில்வந்து உவணமிசை
உன்னுருவம் உன்னா நிற்கும்
முன்னம்எனது உளமறியப் புரிகருணை
உலகுணர முதிர்நாள் என்றோ ?
பன்னகத்தின் தலைஎறிப் பரதம் இயற்
றியசெழுந்தாட் பசும்பொற் குன்றே
மின்னகுவேற் படை வீரர் பலர்போற்றக்
குலவுதமிழ் வீரை மாலே !

கச்சியில்ஒர் புலவன்நவில் கவிஒன்றாற்
போயிமீண்ட கதைமெய் யாகில்
நச்சியவாறு எத்தனையோ பனுவல்நுவன்
றுள்ளேனை நலிக்க லாமோ ?
பச்சிறகொன்று அணிதருகு ழியக்குருந்தாய்ப்
பொதுவர்மனை பலவற்று உற்றாய் !
மெச்சியபா வலர்தமக்கோர் ஆதரமாத்
திகழ்தருதென் வீரை மாலே !

பூதலத்தில் உள்ள உயிர் அத்தனைக்கும்
தகும்உணவு புகட்டும் நீநின்
பாதம்மற வேனைஇவன் வருத்தலும்பே
ரருட்குரிய பண்பு தானோ ?
மாதவன்என்று இறைஞ்சினருக்கு அருள்பேற்றை
இகழ்ந்தார்க்கும் வழங்கி ஆண்டாய்!
மெதகுசிற் றாறுஅதன்பால் விளங்கும்அம
ரர்பதிநேர் வீரை மாலே !

அல்லிக்கே ணியிற்கொடுத்த கடன்சீட்டும்
தலையாகி அலர்ந்த பூவில்
நல்லிக்கே எனஅனந்தை நகரில்உரைத்
திடும்மொழியும் நம்பொண் ணாதோ ?
புல்லில்தோல் உரித்தணிந்தான் தலைநடுச்செந்
நீரருவி பொலியத் தாக்கும்
வில்லிக்கோர் சாரதியாம் விளையாட்டும்
செயத்துணிந்தாய் வீரை மாலே !

திருவரங்கப் பெருநகரில் என்னதுபாட்டு
உவந்துசற்றே சிரித்த நின்வாய்
ஒருவரம்சத் தியமாக கொடுக்கில் இவ்வாறு
ஊருர்தொறும்போய் உழல்வென் கொல்லோ ?
இருவான்புற் றமைவதற்கும் இடங்கொடுத்த
நெடுமேனி இறைவா! விண்ணோர்
வெருவரச்செய் வார்க்கறுவும் வென்றியுளாய்!
வியங்குலவும் வீரை மாலே !

உரைக்கரும்பற் பலதொழும்பர் உனைத்துதிக்கின்
றார்கதிவேட்டு உன்கை ஒர்நாள்
வரைக்குடைதாங் கியும்புரந்த பசுவினம்வாழ்
வதுகுறித்து வருந்து கின்றேன்!
திரைக்கலைப்பா ரினர்இகழா வாறுஅருள்வாய் !
கவுத்துவமும் திகழ்பல் பூணும்
விரைத்துளவும் திருமகளும் மிளிர்மார்பா
வீரர்மலி வீரை மாலே !

தெள்ளியசெந் தமிழ்ப்புலவர் குலம்மதிக்கும்
பேறளித்தாய்! சேணா றாக்கும்
ஒள்ளியசீர்க் குளிகையுளார் இனம்மதிக்கத்
தகும்வாழ்வும் உதவி ஆள்வாய் !
துள்ளியஏறு ஏழ்அடர்த்துஒர் மகட்புணர்ந்தாய்!
பாண்டவர்கை சேரா வண்ணம்
வெள்ளியசங்கு ஒன்றெடுத்து ஊதியகனிவாய்
முகிலனையாய்! வீரை மாலே !

கூர்த்தநெடும் கோட்டொருமால் களிறுஅழைப்பச்
சென்றபுகழ் குன்றி டாமல்
தூர்த்தகுணக் கலியாய் முதலையினால்
தளரும்என்முன் தோன்றி ஆள்வாய் !
போர்த்தகுவர் குலத்தினுக்கோர் கூற்றாகும்
ஆழியங்கைப் புயலே! பொல்லார்
வேர்த்தவச முறத்தாக்கும் வெங்கலவன்
மரபுயர்த்தும் வீரை மாலே !

தந்தைசினம் சகிப்பரிதாத் தன்னுயிர்காப்
பதற்கிரங்கும் தகுவப் பாலன்
சிந்தைஉவப் புறத்தூணில் உதித்ததுண்டேல்
எனக்குதவி செய்யத்தான் வேண்டும்!
பந்தைநிகர் கொங்கைமின்னார் பலர்கலைகொண்டு
ஒருத்திபெறப் பலவாங்கு ஈந்த
விந்தையுள்ளாய்! மண்ணுலகும் விண்ணுலகும்
பரவுதிரு வீரை மாலே !

துதிபகர்என் றனக்குஉலவா அருட்பேறும்
திருக்கோயிற் தொண்டே நாடும்
மதிஇதயா லயற்குஅருமை மகப்பேறும்
இக்கணமே வழங்கி ஆள்வாய் !
பதின்மர் தமிழ்க்கு அருள்புரிந்தாய்! பரிமுகன்கைக்
கனைஎரித்த பாலற் காத்தாய்
விதிவிதிப்பார் பலர்பிறக்கும் வியன் உந்தித்
தாமரையாய்! வீரை மாலே !


நூற்பயன்

சீதளசந் திரனொடுசெங் கதிரனைய
சங்காழித் திருக்கை யானை
வெதநெறி பிழையாமல் உசந்தெறும்பல்
வாறு உருக்கொள் வீரை மாலைப்
போதவளம் பொலியும்நெல்லை பதித்தவமே
போன்ற்திருப் புகழோன் பாடல்
ஏதமற்ற தெனத்துதிப்பார் எவரேனுங்
கருதியபேறு எய்து வாரே.

முற்றிற்று.