Saturday 10 October 2020

தமிழ்ப்பா மஞ்சரி பாடல்கள்

ஊற்றுமலை ஜமீன்ந்தார் இருதாலய மருதப்பத் தேவரையும் வீரகேரளம்புதூரையும் பற்றி உ வே சாமிநாதையர் இயற்றிய தமிழ்ப்பா மஞ்சரி பாடல்கள்.



பாடல் 1:

மண்களிக்கும் வீரையிடைக் கண்ணன்நவ நீதமிரு
             மலர்கை ஏந்திக் 
கண்களிக்கும் படி நிற்கும் காட்சிஇத யாலயமா
             கனவான் ஊட்டும்  
விண்களிக்கும் சுவைமிகுசிற் றுண்டிகளா தியநிதமும்
             விரும்பி உண்டுண்
டெண்களிக்கும் சுவையதனை மறந்தொழிந்த
         பெருமிதத்தை இயம்பும் மன்னே !!


பொருள் :

ஊற்றுமலை ஜமீன்ந்தார் இருதாலய மருதப்பத் தேவர் .
வீரை - வீரகேரளம்புதூர் 
இங்கே நவநீதகிருஷ்ணசுவாமியின் ஆலயம் இருக்கிறது.

நவநீதகிருஷ்ணசுவாமி கையில்  வெண்ணெயை ஏந்தி நிற்பதை போல , இருதாலய மருதப்பத் தேவர் நிவேதித்த  சிற்றுண்டி வகைகளை உண்டு வெண்ணை சுவையை மறந்துவிட்ட  நிலையை காட்டுகிற தென்றபடி.

பாடல் 2:

தன்னிடைமுன் துயின்றிடுமா தவன்வடிவு பிறிதொன்று 
            தரித்தே தன்பால் 
மன்னிடுமற் றையஅனைத்தும்  மருவிஇத யாலயப்பேர் 
            மருவி யாரும் 
பன்னிடுமா றுறல்தெரிந்த பாற்கடலும்  அவன்போலப் 
            படிவ மாறித் 
துன்னிடுமற்றையதங்கி அவற்றங்கி  வீரையெனத் 
            துலங்கிற் றலோ. 

பொருள் :

திருமால் இருதாலய மருதப்பத் தேவராக தோன்ற, அதனையறிந்த 
பாற்கடலும் வீரகேரளம் புதூராகத் தோன்றியதென்றபடி.

அவற்றங்கி  -அவனைத் தாங்கி.
வீரை - வீரகேரளம்புதூர் : கடல் என்றும் ஒரு பொருள் உண்டு. 



வீரகேரளம்புதூர் என்ற இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தமிழ்காத்த, புலவர்களைப் புரந்த ஊற்றுமலை ஜமீன் ஊர் என்பதே! இந்த ஜமீனைப் பற்றி தமிழ் தாத்தா – உ. வே. சாமிநாதையர். தமது நினைவு மஞ்சரியான என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

Sunday 3 May 2020

தென்காசி மாவட்டம்

தென்காசி மாவட்டம்


திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய இரு வருவாய் கோட்டங்களுடன், தென்காசி, சங்கரன்கோவில், சிவகிரி, ஆலங்குளம், திருவேங்கடம், கடையநல்லூர், செங்கோட்டை, வீரகேரளம்புதூர் ஆகிய 8 தாலுகாக்களுடன் இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.இதன்மூலம் தமிழகத்தின் 34வது மாவட்டமாக தென்காசி மாவட்டம் உதயமாகி உள்ளது.

மக்களின் நலன் கருதியும், அரசின் நிர்வாக வசதிக்காகவும் திருநெல்வேலி மாவட்டத்தைப் பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.. வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பாண்டிய மன்னர்களான அதிவீரராமபாண்டியன், பராக்கிரமபாண்டியன் ஆகியோர் தென்காசியை தலைமையிடமாகக் கொண்டுதான் ஆட்சி செய்துள்ளதாக வரலாற்றுக் குறிப்புகள் உள்ளது..

இதன் பின்னர் கடந்த ஜூலை மாதம் 18ம் தேதி தென்காசி தனி மாவட்டம் அமையும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்தார். நவம்பர் 12ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய தென்காசி மாவட்டம் அமைவது தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசானையை வெளியிட்டது. இது தமிழகத்தில் 34 வதாக உருவான மாவட்டமாகும்.

திருநெல்வேலி மாவட்டம் 6 ஆயிரத்து 823 ச.கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இதில் சுமார் 3ஆயிரத்து 200 ச.கி.மீ.தென்காசி மாவட்டமாக உருவெடுக்கிறது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நெல்லை மாவட்டத்தின் மக்கள்தொகை 30 லட்சத்து 73 ஆயிரம். இதில் புதிதாக உருவாகும் தென்காசி மாவட்டத்தில் சுமார் 15 லட்சம் பேர் இடம் பெறுகிறார்கள்


இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், 8 வருவாய் வட்டங்களும் கொண்டது.[9]

வருவாய் கோட்டங்கள்
தென்காசி
சங்கரன்கோவில்
வருவாய் வட்டங்கள்
கடையநல்லூர் வட்டம்
சங்கரன்கோயில் வட்டம்
சிவகிரி வட்டம்
ஆலங்குளம் வட்டம்
வீரகேரளம்புதூர் வட்டம்
தென்காசி வட்டம்
செங்கோட்டை வட்டம்
திருவேங்கடம் வட்டம்

நகராட்சிகள்
கடையநல்லூர்
தென்காசி
சங்கரன்கோவில்
புளியங்குடி
செங்கோட்டை

பேரூராட்சிகள்
குற்றாலம்
சுரண்டை
கீழப்பாவூர்
பண்பொழி
இலஞ்சி
செங்கோட்டை புதூர்
அச்சம்புதூர்
ஆலங்குளம்
ஆய்க்குடி
இராயகிரி
சாம்பவர் வடகரை
சுந்தரபாண்டிபுரம்
வாசுதேவநல்லூர்
சிவகிரி
திருவேங்கடம்

ஊராட்சி ஒன்றியங்கள்
இம்மாவட்டம் 9 ஊராட்சி ஒன்றியங்களைக் கொண்டது.

சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம்
மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி ஊராட்சி ஒன்றியம்
செங்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்