History

தென்தமிழகத்திலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் தென்றல் தவழும் தென்காசி நகருக்கு கிழக்கில் 20 கி.மீ.தொலைவில் நீர்வளமும் , நிலவளமும் நிறைந்த குற்றாலச் சாரலின் குளுமையுடன் சிற்றாற்றின் வடபுரம் அமைதியும் இயற்கை அழகும் கொண்ட பேரூராக “வீரகேரளம்புதூர்” அமைந்துள்ளது.இதனை பழைய காலத்தில் வீரை, வீரைநகர் எனவும் தற்போது வீரகேரளம்புதூர்,வீ கே புதூர் என அழைக்கபடுகிறது.

திருவீரையின் சிறப்பு :

வீரை என்னும் வீரகேரளம்புதூரின் சிறப்பினை புலவர்கள் வெகுவாக போற்றி உரைக்கின்றனர்.


"கயல்நீர்க் கழனிவளங்ளும் கமலவாவிகளும்
கடிமதில்களும் மஞ்சடர்ந்த பொழில்களும்
மணி மாட மாளிகைகளும் நிறைந் இவ்
வீரையூரைத் தம்ழ்ப்பாண்டி வதனம் போலும்
திருமாலின் வீரை "- என்றும் .

இசைப்பார் இசைக்கும் நலம் முழுதும் இயங்கும் வீரைபதி-என்றும் தண்டயுதபாணி சுவாமிகள் வீரை கலம்பகத்தில் போற்றுகின்றார்.


“நம்தமிழ் நாட்டின் ஒண்முகமே போன்று ஒருக்கால் உற்றார்க்கும்
தீவினை தீர்த்து ஒழுகுபுனற்பெருக்கு ஓவாச்
சிற்றாற்றின் வடபாலில் திகழ் வீரை நகர்”

என வண்ணச்சரபர் தண்டபாணி சுவாமிகளால் போற்றப்படும் செந்தமிழ்ப் பெருக்கமும் செந்நெல்சூழ் சிறப்பும் ஒருங்கே பெற்ற வீரகேரளம்புதூர்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் இப்பகுதியில் வழ்ந்து இருக்கவேண்டும் எனனில் இங்கே இருக்கும் பழமையான சிவன் கோவில் 1063ல் கட்டபட்டது.அதில் .இருதயாலீஸ்வரர் கோவில் திருப்பணி வேலை 1063-வருடம் பங்குனி மாதம் 3 நாள் வரை முடிவு பெற்றதிற்கான கல்வெட்டு உள்ளது.அத்துடன் பாண்டியர்களின் மீன் சின்னம் இக்கோவிலில் உள்ளது.1218 இல் வீரகேரளன் என்ற மலையாளதேச மன்னன் இப்பகுதிக்கு "வீரகேரளம்புதூர்” என பெயர் வைத்துள்ளன்.பின்னர் தென்காசியை தலைநகரமாய் கொண்டு ஆண்ட பாண்டியர்களின் வசம் இருந்துள்ளது.

தென்காசிப் பாண்டியர்களில் வரகுணராம பாண்டியன் வம்சா வழியினரான ஊற்றுமலை ஜமீன்கள் வசமும்.1700ல் இருந்து வீரகேரளம்புதூர் ஊற்றுமலை ஜமீனின் தலைநகராகவும்.ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் தென்காசியின் கூடுதல் தாலுகாவாக இயங்கி வந்த வீரகேரளம்புதூர் 1-9-1998ல் தனி தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது.தற்போது வீரகேரளம்புதூர் வட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது.


மருதப்பர் காலத்தில்தென்காசிக்கு அடுத்து இந்தப் பிரதேசத்தில் பெரிய ஊராக இருந்தது இதுதான்.ஊத்துமலை ஜமீன்தார் இருதாலய மருதப்பத்தேவர் நல்ல தமிழ்ப் புலவர். புலவர்களை ஆதரிப்பவர். அவருடைய ஆஸ்தான கவியாக இருந்தார் அண்ணாமலை ரெட்டியார். இருவருக்கும் தமிழால் நெருக்கம் அதிகம். மருதப்பர் காலத்தில் 38 புலவர்கள் ஜமீனில் இருந்தனர். இந்தளவுக்கு தமிழ்ப் புலவர்கள் அதிகம் இருந்தது இந்த ஜமீனில்தான்.
வீரகேரளம்புதூர் என்ற இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உண்டு. அது தமிழ்காத்த, புலவர்களைப் புரந்த ஊற்றுமலை ஜமீன் ஊர் என்பதே! இந்த ஜமீனைப் பற்றி தமிழ் தாத்தா – உ. வே. சாமிநாதையர். தமது நினைவு மஞ்சரியான என் சரித்திரம் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஊற்றுமலை ஜமீன்


1.ஊற்றுமலை வம்சாவளி

2.ஹிருதயாலய மருதப்பத் தேவர் பற்றி சாமிநாதையர்

3.பூசைத் தாயார்

4.லட்டுச் சுமை

5.அன்னபூரணத்தின் அவலக்கதை-I

6.அன்னபூரணத்தின் அவலக்கதை-II

7.ஊற்றுமலை ஜமீன் தார்

தமிழ்ப் புலவர்கள்


1.தமிழ் தாத்தா – உ. வே. சாமிநாதையர்

2.அண்ணாமலை ரெட்டியார்

3.வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்

4.இராவ் சாகிப்" வெள்ளக்கால் ப.சுப்பிரமணியன்

5. மகாவித்துவான்' ரா.ராகவையங்கார்

6. நெல்லை சங்கர நமச்சிவாயர்

7.இராமநாதபுரம் சமத்தானம் முத்துராமலிங்கசேதுபதி.

8.மதுரை நீ.இராமலிங்கம் பிள்ளை.

9.திருச்செந்தூர் குஞ்சுபாரதிகள்.

10.புனல்வேலி வரதராஜபாரதிகள்.

11.புனல்வேலி இராமசுவாமிபாரதிகள்.

தமிழ் விடுதலை வீரர்கள்


1.பூலித்தேவன்

2.வீரவாஞ்சிநாதன்

தமிழ் எழுத்தாளர்கள்


1.முனைவர் திரு.ச.வே.சுப்பிரமணியன்- வீரகேரளம்புதூர்.

2.முனைவர் திரு.இரா.மாதவன்-தஞ்சை.

3.திரு.இரா.உ.விநாயகம் பிள்ளை-வீரகேரளம்புதூர்.

4. திரு.கழனியூரன்-கழுநீர்குளம்.

5.திரு.த. மருது பாண்டியன்-ஊற்றுமலை.

6. திரு.ஸ்ரீராம்-செங்கோட்டை.3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete