
உ.வே.சாமிநாதையர் பிப்ரவரி 19, 1855-ல் பிறந்தார். தமிழ் தாத்தா என்றழைக்கப்படும் இவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் அநேகம். பழம் பெரும் தமிழ் இலக்கியங்களைத் தேடிப்பிடித்து தமிழுக்கு மகத்தான சேவையாற்றியவர்.இவர் இல்லையென்றால் நாம் தமிழின் பல நூல்களை இழந்துவிட்டிருப்போம். ஒவ்வொரு நூலையும் பதிப்பிக்க அவர் எடுத்துக்கொண்ட உழைப்பை, கடும் போராட்டத்தை அவரது சுயசரிதமான என் சரித்திரத்தில் நாம் படிக்கும்போது நம் மனதில் என்றென்றுமாக நிலைத்து நின்றுவிடுகிறார் உ.வே.சா. அவர் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000-க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்து ஏடுகளையும் சேகரித்திருந்தார். அவர் பிறந்த இந்த பிப்ரவரி மாதத்தில் அவரையும் அவர் ஆற்றிய அரும் பணிகளையும் நினைவு கூர்வது நம் கடமையாகும்.
No comments:
Post a Comment