Sunday 21 April 2013

தைப்பூசம்


தைப்பூச நன்னாள் சிவசக்தி ஐக்கியத்தையும் மேம்பாட்டையும் விளக்கும் புனிதமான ஒரு பெருநாளாகும். தைமாதம் உத்தராயண காலத்தில் ஆரம்பம். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்தநாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தைப்பூசத்தன்று முருகப் பெருமான் கோவில்களில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்தல் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே பல்வேறு இன்னல்கள் கொடுத்து வந்த அசுரர்களை அழிக்க வேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டனர். தங்களால் அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே தங்களுக்கு தலைமை தாங்கிச் செல்லக்கூடிய ஆற்றல்வாய்ந்த, சக்தி மிக்க ஒரு தலைவனை உருவாக்க வேண்டும் என்று அவர்கள் சிவபெருமானிடம் வேண்டினர்.

கருணைக்கடலாம் எம்பெருமான், தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப் பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன்.சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின. கார்த்திகைப் பெண்களால்,அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டு பின்னர் ஆறுமுகங்களுடன் அவதரித்தது. அப்படி அவதரித்த வரே கந்தன் எனப்படும் முருகனாவார்.சிவபெருமானின் தேவியான அன்னனை பார்வதி தேவியானவள் ஆண்டி கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும்



முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான்.அதன் காரணமாகவே பழனி மலையில் தைப்பூசத்திருவிழா மற்ற முருகன் கோவில்களைக் காட்டிலும் வெகுச்சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி அளிக்கப்பட்ட வேலினை ஆயுதமாகக் கொண்டே முருகன் அசுர குலத்தை அழித்து தேவர்களைக் காப்பாற்றினான்.

தேவர்களுக்குத் தொல்லை கொடுத்த அரக்கர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலைவாயில் வதம் செய்து தேவர்கள் நிம்மதி
அடையச் செய்தவர் முருககடவுள். எனவே தான் அசுரர்களை வதம் செய்ய முருகப்பெருமான் பயன்படுத்திய வேலினை வழிபட்டால்,
தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடி பணிந்து நல்லருளை நல்கும் என்பது ஐதீகம்.
வாயுபகவானும், வருணதேவனும், அக்கினிதேவனும் ஒரு சமயம் தமது வலிமையைப்பற்றிப் பெருமை பேசித் தம்முள் போட்டி போட்டனர். அப்போது, அவர்களருகில் ஒரு சிறு துறும்பு காணப்படவே, வாயுபகவான் அசைக்க முயன்று தோற்றார். அக்னி தேவன் எரிக்கமுயன்று தோற்றார். வருணபகவான் அதனை நனைக்க முயன்று தோற்றார். மூவரும் இதுகண்டு திகைத்து அவைவற்று நின்றனர். அப்போது நாரதமுனவர் அங்கு தோன்றி எல்லோருக்கும் மேலான பரம்பொருட்சக்தியைப் பற்றி எடுத்துரைத்து அவர்களது கர்வத்தை அடைத்தார். தைப்பூச நன்னாளில் அவர்களது அருட்சக்தி அதிகரிக்க அருள்செய்வதாக ஆண்டவன் அருள்புரிந்தார்.

பதஞ்சலி, வியாக்கிரிபாதர் முதலானோர் தரிசிக்கச் சிவபெருமான் ஆனந்ததாண்டவமாடியதும் தைப்பூசநாளிலேதான். இப்புனித நாளில் யாவரும் அசௌகரியம் நீங்கி ஆரோக்கியமும் ஆற்றலும் பெறுவர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கியத்திற்கிணங்கத் தை பிறந்த சிலநாட்களில் இத்தினம் தோன்றிப் புத்துணர்ச்சியூட்டி மணவாழவில் மகிழ்ச்சியையும் சகல மங்கலங்களையும் ஊட்டுகிறது.

சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும் இது அமைகிறது. முருகன் ஆலயங்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்த்ப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.

தைப்பூசத்தை முன்னிட்டு முருக பக்தர்கள், மார்கழி மாத ஆரம்பத்தில் துளசி மாலை அணிந்து விரதத்தை தொடங்குவார்கள். சஷ்டி கவசம், சண்முக கவசம், திருப்புகழ் போன்ற பாடல்களை அன்றாடம் பாராயணம் செய்து தைப்பூசத்தன்று பழனி முருகன்,திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து விரதத்தை முடிப்பார்கள்.


ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள்.முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். தைப்பூசத்தன்று முருகனுக்கு காவடி நேர்த்திக்கடன் செலுத்து வதையும் பக்தர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.தைப்பூசநாள் விரதக்கட்டுபாடுகள் குறைந்த ஆனால் வழிபாடு, திருவிழா, காவடி இவற்றோடு கூடிய இனிய ஒரு கொண்டாட்டமாக மலர்கிறது.உலச்சிருஷ்டி ஆரம்பமானது இத்தினத்திலேதான். ஆண்டவன் முதலில் ஜலத்தையே படைத்தார். அதிலிருந்து பிரமாண்டம் உருவானது. இதனை நினைவூட்ட ஆலயங்களில் இத்தினத்தில் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு.


வீரகேரளம்புதூர் தைப்பூச திருமுருகன் பாதயாத்திரைக்குழு

வீரகேரளம்புதூர் பழனி பாலன் தைப்பூச பாதயாத்திரைக்குழு

தை பூசத்திற்க்கு நாற்பத்தியொரு நாட்களுக்கு முன்பாக மாலை அணிந்து விரதம் இருந்து தை பூசத்திற்க்கு நான்கு நாட்களுக்கு முன்பாக வீரகேரளம்புதூரில் இருந்து பாதயாத்திரையாக திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வரை காவெடி எடுத்தும் சப்பரம் இழுத்தும் நடந்து செல்லுகின்றனர்.இதே போல் பழனிக்கும் நடந்து செல்லுகின்றனர்.

No comments:

Post a Comment