Sunday, 21 April 2013

பதினெட்டுச் சித்தர்கள்

பெயர் - நந்தி தேவர்
குரு - சிவன்
சீடர்கள் - திருமூலர், பதஞ்சலி, தக்ஷிணாமூர்த்தி, ரோமரிஷி, சட்டமுனி
சமாதி - காசி (பனாரஸ்)

பெயர் - அகஸ்தியர்
குரு - சிவன்
சீடர்கள் - போகர், மச்சமுனி
சமாதி - அனந்தசயனம் (திருவனந்தபுரம்)

பெயர் - திருமூலர்
உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு
குரு - நந்தி
சமாதி - சிதம்பரம்

பெயர் - போகர்
உத்தேச காலம் - கி.பி. 10ம் நூற்றாண்டு / கி.பி. 14 / கி.பி. 17
குரு - அகஸ்தியர், காளங்கி நாதர்
சீடர்கள் - கொங்கனவர், கருவூரார், இடைக்காடர்
சமாதி - பழனி

பெயர் - கொங்கனவர்
உத்தேச காலம் - கி.பி. 14ம் நூற்றாண்டு
குரு - போகர்
சமாதி - திருப்பதி

பெயர் - மச்சமுனி
குரு - அகஸ்தியர், புன்னக்கீசர், பாசுந்தர்
சீடர்கள் - கோரக்கர்
சமாதி - திருப்பரங்குன்றம்

பெயர் - கோரக்கர்
குரு - தத்தாத்ரேயர், மச்சமுனி
சீடர்கள் - நாகார்ஜுனர்
சமாதி - போயூர் (கிர்னார், குஜராத்)

பெயர் - சட்டமுனி
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - நந்தி, தக்ஷிணாமூர்த்தி
சீடர்கள் - சுந்தரானந்தர்
சமாதி - ஸ்ரீரங்கம்

பெயர் - சுந்தரானந்தர்
குரு - சட்டமுனி, கொங்கனவர்
சமாதி - கூடல் (மதுரை)

பெயர் - ராம தேவர் (Yakub / Jacob)
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - புலஸ்தியர், கருவூரார்
சமாதி - அழகர் மலை

பெயர் - குதம்பை
உத்தேச காலம் - கி.பி. 14 - 15ம் நூற்றாண்டுகள்
குரு - இடைக்காடர், அழுக்காணி சித்தர்
சமாதி - மாயவரம்

பெயர் - கருவூரார்
குரு - போகர்
சீடர்கள் - இடைக்காடர்
சமாதி - கருவை (கரூர்)

பெயர் - இடைக்காடர்
குரு - போகர், கருவூரார்
சீடர்கள் - குதம்பை, அழுக்காணி சித்தர்
சமாதி - திருவண்ணாமலை

பெயர் - கமலமுனி
சமாதி - திருவாரூர்

பெயர் - பதஞ்சலி
குரு - நந்தி
சமாதி - ராமேஸ்வரம்

பெயர் - தன்வந்தரி
சமாதி - வைத்தீஸ்வரன் கோவில்

பெயர் - பாம்பாட்டி
குரு - சட்டமுனி
சமாதி - சங்கரன் கோவில்

பெயர் - வால்மீகி
குரு - நாரதர்
சமாதி - எட்டிக்குடி


இந்தப் பட்டியல் சித்தர்களின் பெரிய ஞானக் கோர்வை உள்ளிட்ட தற்கால புத்தகங்களின் அடிப் படையிலானது. பதினெட்டு சித்தர்கள் பட்டியலில் பழங்கால நூல்களிலும், தற்கால புத்தகங்களிலும் பல பெயர்கள் மாறுபடுகின்றது. இந்தப் பட்டியலில் உள்ள சித்தர்கள் தவிர புலஸ்தியர், புலிப்பானி, புன்னக்கீசர், கொங்கேயர், பூனைக்கண்ணார், காளாங்கி நாதர், அழுக்காணி, தேரையார், ரோமரிஷி ஆகியோரும் சிலரது கூற்றுப்படி பதினென் சித்தர்களே. இவர்களில் புலஸ்தியர், காளாங்கி நாதர், அழுக்காணி போன்றோர் பட்டியலில் உள்ள சிலருக்கு குருவாகவும் இருந்திருக்கிறார்கள். இதன் மூலம், இவர்களும் எவ்விதத்திலும் குறைந்தவர்களல்ல என்பதை அறியலாம்.

பதினெட்டு சித்தர்கள் என்பது ஒரு சபை எனவும், இது பல்வேறு நூற்றாண்டுகளில் கூடியது எனவும், அந்தந்த காலகட்டங்களில் வாழ்ந்த சித்தர்கள் அதில் பங்கு பெற்றார்கள், ஆகவே பதினென் சித்தர்கள் பட்டியல் நூலுக்கு நூல் வேறுபடுகிறது எனவும் கருதத்தக்க சில சுவடிகளும் கிடைத்துள்ளன.

உயர்ந்த மகான்கள் நிறைந்த இடத்தில் பதினெட்டுப் பேர்களை மட்டும் தேர்ந்தெடுப்பது கடினமான காரியம். சர்ச்சைக்குரியதும் கூட. இவர்களின் உத்தேச காலங்கள் வரலாற்று அறிஞர்களின் கருத்துப்படி இங்கு குறிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment